Breaking News

தமிழ்நாடு எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா!

 


தமிழ்நாடு எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாளாம், தைப்பொங்கல் பண்டிகை தைத்திங்கள் 1ஆம் நாள் உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு எச்எம்எஸ் உழைப்பாளர் சங்கம் சார்பில் அதன் தூத்துக்குடி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் எச்எம்எஸ் உழைப்பாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். எச்எம்எஸ் மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். எச்எம்எஸ் மகளிரணியினர் பாரம்பரிய முறைப்படி வாழையிலையில் புத்தரிசி, காய்கறி, பழங்கள் உள்ளிட்டவைகளை படையலிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டனர். தொடர்ந்து பானையில் பொங்கல் பொங்கி வந்ததும், குலவையிட்டு பொங்கலோ... பொங்கல் என ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாரிக் கொண்டனர். தொடர்ந்து, பெண்கள் கும்பிப்பாட்டு பாடியவடி பொங்கல் திருநாளை கொண்டாடினர்.

விழாவில், யூனைடெட் ஓர்க்ஸ் சங்க பொதுச் செயலாளர் (எச்.எம்.எஸ்) ஜான் கென்னடி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல், தொகுதிச் செயலாளர்கள் ராஜேஷ், வேலபுஷ்பம், மணிகண்டன், பெமினா, இணைச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட மகளிரணி நிவ்யா, சந்திராமணி, மாலதி, காமாட்சி, ராஜேஸ்வரி, விஜி, சரஸ்வதி, அமுதா செல்வி, சரோஜா, மேகலா, இளைஞரணி செந்தில், ஹர்ஷவர்தன், பூர்ணிக்கா அஸ்வினி, நவஸ்ரீ அனுஷ், சுப்புராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!